நீயும் தெய்வமாவது எப்படி விளக்கமளிக்கிறார் சிவானந்தர்
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
30அக் 2026 12:10
* பணிவும், எளிமையும் இருந்தால் நீயும் தெய்வமாகலாம். * ஒரு செயலுக்கு சமமான எதிர்வினை உண்டு. எனவே தீமை செய்யாதே. * நல்லவரின் நட்பும், நல்ல நுால்களும் உலகமாகிய கடலை தாண்ட உதவும். * உணர்ச்சி வசப்படாதே. மனதை உன் வசமாக்கு. * சத்தியம், நியாயம், விவேகத்துடன் செயல்படு. * கட்டுப்பாடு இருந்தால் தான் லட்சியத்தை அடைவாய். * நல்ல கொள்கைக்காக உயிரையும் தியாகம் செய்ய தயாராக இரு. * எந்த நிலையில் நீ இருந்தாலும் அதற்காக கவலைப்படாதே. * மனத்துாய்மை இருந்தால் கடவுளை அடையலாம். * இரக்கம், தன்னடக்கம், வாய்மை, நேர்மை, துாய்மை, தவம் ஆகியவை ஆன்மிகத்தின் முதுகெலும்பு. * நல்ல குணம் கொண்டவர்கள் வாழும் குடும்பம் கோயிலுக்கு நிகராகும். * பெயர், புகழ், பணம் போன்ற ஆசைகளை விடு. உண்மையான அன்பை உணர்வாய். * கருணையே உயர்வான குணம்; குற்றத்தை மன்னிப்பதே மகத்தான சக்தி. * மனஅமைதி கொண்டோரிடம் ஆனந்தம் நிறைந்திருக்கும்.