Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சலவை தொழிலாளி கனவில் தோன்றிய ... விஷ ஜந்துக்கள் பயத்தை போக்கும் ரங்கநாதர் விஷ ஜந்துக்கள் பயத்தை போக்கும் ...
முதல் பக்கம் » துளிகள்
சனீஸ்வரரை குளிர்விக்க சிவனுக்கு எண்ணெய் அபிஷேகம் செய்யும் கோவில்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
சனீஸ்வரரை குளிர்விக்க சிவனுக்கு எண்ணெய் அபிஷேகம் செய்யும் கோவில்

பதிவு செய்த நாள்

03 நவ
2026
10:11

பெங்களூரு ரூரல் மாவட்டம், தொட்டபல்லாபூர் தாலுகாவில் கெலகினஜுகனஹள்ளி கிராமத்தில் உள்ள தேவரபெட்டா மலையில் விஸ்வ சனீஸ்வரா கோவில் அமைந்துள்ளது. சனீஸ்வரருக்கு அர்ப்பணிக்கப்பட்ட இந்த கோவிலில், பஞ்சலோகத்தால் செய்யப்பட்ட 30 அடி உயரமுள்ள சனீஸ்வரர் பிரமாண்ட விக்கிரகம் உள்ளது.

பஞ்சலோகம்

இந்த பஞ்சலோக சிலைக்கு முன்பாக, கல்துாணில் மிகவும் நேர்த்தியாக செதுக்கப்பட்ட 11 அடி உயர மற்றொரு சனீஸ்வரர் சிலையும் அமைந்துள்ளது. சனிக்கிரகத்தின் தாக்கத்தால் அதாவது ஏழரை சனி, அஷ்டம சனி, அர்த்தாஷ்டம சனியால் பாதிக்கப்பட்டவர்கள், தொழில் முடக்கம், திருமண தடை, உடல்நலக்குறைவு உட்பட பல பிரச்னைகளால் இன்னல்படுவோர் இங்கு வந்து சனீஸ்வரரை வழிபடுகின்றனர்.

தங்கள் வேண்டுதல் பலித்தால், சனீஸ்வரருக்கு உகந்த கருப்பு எள்ளை துணியில் முடிச்சாக கட்டி, நல்லெண்ணெயில் நனைத்து விளக்கேற்றி வழிபட்டு நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். சனிக்கிழமைதோறும் அஷ்டோத்திர பூஜைகள், பல்லக்கு உற்சவம், விசேஷ அபிஷேகங்கள் நடைபெறுவதால் பக்தர்கள் அதிகளவில் வருகின்றனர். பக்தர்களை வெறும் வயிற்றுடன் அனுப்பக் கூடாது என்பதற்காக அன்னதானம் வழங்கப்படுகிறது.

பல ஆண்டுகளுக்கு முன்பு, கோவில் அமைந்துள்ள இடத்தில் சனீஸ்வரருக்கு கோவில் கட்ட நிலத்தை தோண்டிய போது, பூமிக்கு அடியில் இருந்து சிவலிங்கம் கிடைத்துள்ளது. தற்போதும் அந்த சிவலிங்கம் கோவிலில் வைக்கப்பட்டுள்ளது. கோவிலுக்கு வரும் பக்தர்கள் சிவலிங்கத்திற்கு தங்கள் கையால் எண்ணெய் அபிஷேகம் செய்து வழிபடலாம்.

நம்பிக்கை

சனீஸ்வரரின் அதிபதியாக அல்லது குருவாக சிவபெருமான் இருப்பதால், சனீஸ்வரர் வழிபாட்டு தலத்தில் உள்ள சிவலிங்கத்திற்கு நல்லெண்ணெய் அபிஷேகம் செய்யும் போது, சனி தோஷத்தின் வீரியம் குறையும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.

கோவில் நடை தினமும் காலை 7:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை திறந்திருக்கும். சனிக்கிழமை மட்டும் அதிகாலை 4:00 மணிக்கே நடை திறக்கப்படும்.

எப்படி செல்வது?

* பெங்களூரு மெஜஸ்டிக்கில் இருந்து கெலகினஜுகனஹள்ளி கிராமம் 60 கி.மீ., துாரம். தொட்டபல்லாபூரில் இருந்து 18 கி.மீ.,
* மெஜஸ்டிக்கில் இருந்து தொட்டபல்லாபூருக்கு 285எம் என்ற எண் கொண்ட பி.எம்.டி.சி., பஸ் அடிக்கடி செல்கிறது.
* தொட்டபல்லாபூர் டவுனில் இருந்து கோவிலுக்கு ஆட்டோவில் செல்லலாம்.
* காட்டி சுப்பிரமணியா கோவிலில் இருந்து 4 கி.மீ., துாரத்தில் சனீஸ்வரர் கோவில் உள்ளது.
* பைக், காரில் செல்வோருக்கு வாகன நிறுத்தும் வசதி உள்ளது.

பகிர்க copied
 
மேலும் துளிகள் »
temple news
பொதுவாக ஒவ்வொரு கோவில்களிலும், ஒவ்வொரு விதமான வழிபாடுகள், பாரம்பரியம் இருக்கும். அதே போன்று, ... மேலும்
 
temple news
மைசூரு மாவட்டம் டி.நரசிபுரா தாலுகாவில் காவிரி கரையோரத்தில் குஞ்சா (குண்டுமணி) லட்சுமி நரசிம்மர் ... மேலும்
 
temple news
* பணிவும், எளிமையும் இருந்தால் நீயும் தெய்வமாகலாம்.   * ஒரு செயலுக்கு சமமான எதிர்வினை உண்டு. எனவே தீமை ... மேலும்
 
temple news
* உன்னுடைய கடமைகளை சரியாக செய். * பிறருடைய நன்மைக்காக பாடுபடும் போது மனம் துாய்மை பெறும்.  * மனதை ... மேலும்
 
temple news
* கடவுளை வணங்கு. நல்ல காலம் பிறக்கும்.  * பிறர் செய்யும் தவறுகளை நினைத்து வருந்தாதே. * இளமையிலேயே ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar