ஒரு பள்ளியில் ஆசிரியர், மாதப்பரிட்சை முடிந்து மாணவர்களுக்கு விடைத்தாள் கொடுத்தார். ஒரு மாணவன் பேப்பரை வாங்கியவுடன் அழ ஆரம்பித்து விட்டான். “ஏண்டா அழுகிறாய். நீதான் கணக்கில் 96 மார்க் வாங்கியிருக்கிறாயே! அதற்காக சந்தோஷப்படாமல், அழுது கொண்டிரு க்கிறாயே!” என்றனர் சக மாணவர்கள். “என்னடா செய்வது! எனக்கு மேலே நான்கு பேர் 97,98,99, 100 என வாங்கி விட்டார்களே!” என வருத்தப் பட்டான் அந்த மாணவன். இன்னொரு மாணவன் சிரித்துக் கொண்டிருந்தான். அவனிடம் சென்ற மாணவர்கள், “டேய்! நீ வாங்கியிருப்பதே நாலு மார்க். இதிலே என்னடா சிரிப்பு வேண்டியிருக்கு?” என்றனர். “அட போங்கடா! எனக்கும் கீழே 3,2,1,0 என நான்கு பேர் மார்க் வாங்கியிருக்கிறார்க ளே. அவர்களை விட நான் உசத்தி இல்லையா? அதனால் தான் சிரிக்கிறேன்,” என்றான். மாணவர்களே! இந்த சம்பவத்தில் இருந்து நீங்கள் அறிய வேண்டியது என்ன தெரியுமா நீங்கள் மேலான விஷயங்களைப் பற்றி மட்டுமே சிந்திக்க வேண்டும். முதல் மாணவன் தன் முயற்சியின்மைக்காக அழுகிறான். அடுத்த மாணவன் தன் தோல்வியை மறைக்க சிரிக்கிறான். “மேலானவைகளைத் தேடுங்கள்,” என்று பைபிள் குறிப்பிடுகிறது. அதை உணர்ந்து நடந்து கொள்ளுங்கள்.