மக்களில் ஏழை, பணக்காரர் என்ற வேறுபாடு பார்க்கக்கூடாது. பணம் இருக்கிறதே என்பதற்காக, சக முஸ்லிம் ஏழையாக இருக்கும் பட்சத்தில் அவர்களின் வறுமையை கேலி செய்யக் கூடாது. இப்படி செய்தால் என்னாகும்? “முஃமின்களில் (மார்க்கநெறிகளைப் பின்பற்றுபவர்) ஆணோ, பெண்ணோ ஏழைகளாக இருக்கின்றார்கள் என்பதற்காக அவர்களை ஏளனமாகவும், கேவலமாகவும் எவர் நினைப்பார்களோ அல்லது அவர்கள் மீது வீண்பழி சுமத்துவார்களோ அல்லது அவர்களிடம் இல்லாத குறைகளை அவர்கள் மீது சுமத்துவார்களோ அத்தகையோரை மறுமை நாளில் அல்லாஹ் நெருப்பு மேடையில் நிறுத்தி தண்டனை கொடுப்பான்” என எச்சரிக்கை விடுக்கிறார் நபிகள் நாயகம். ஏழைகளையும் மனிதர்களாக மதித்து நடக்க கற்றுக் கொள்ள வேண்டும்.