இதற்கு சஷ்டியப்த பூர்த்தி சாந்தி என்று பெயர். தமிழ் வருடங்கள் அறுபது. இதில் நாம் பிறந்த வருடம் மீண்டும் நம் ஆயுளில் காண்பது அறுபதாவது வயதில். மறுபடியும் காண்பதற்கு 120 வயது வரை காத்திருக்க வேண்டும். அதுவரை காலமும் நமக்காக காத்திருக்க வேண்டுமே? எனவே நம் வாழ்நாளில் நாம் பிறந்த வருடம், மாதம், நட்சத்திரம் மூன்றையும் இணைந்து காண்பதாகிய நிகழ்வு ஒரு அற்புதம். எனவே அதை மறுபிறவி என்று கூட சொல்லலாம். இதில் ஆயுள், ஹோமம் முதலியன செய்வது சாந்தியாகவும் மனைவிக்கு மாங்கல்யம் அணிவித்து கல்யாணமாகவும் செய்ய ÷ வண்டியது அவசியம் தான். ஆடம்பரமில்லை.