Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
தரமான நெய் கொண்டு போங்க! கார்த்திகையை எத்தனை நாள் கொண்டாட ...
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
நாளெல்லாம் நமக்கு திருநாளே! மகான் (சிவானந்தர்)
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

14 நவ
2016
04:11

*உங்களின் வருமானத்தில் பத்தில் ஒரு பங்கினைத் தர்மம் செய்யுங்கள். தினமும் பகவத்கீதையில் ஒரு அத்தியாயம் படியுங்கள். இதனால் வாழ்வில்  எல்லா நாளும் நல்ல நாளாக அமைந்திருக்கும்.
*நம் ஒவ்வொருவருக்கும் அன்பான தாயும் தந்தையுமாக கடவுள் இருக்கிறார். அவரே நம்மை விட்டு அகலாத உயிர்த்தோழனாகவும் இருக்கிறார்.
*உலகில் ஒரு வழிப்போக்கனைப் போல வாழக் கற்றுக்கொண்டால் ஆசைகள் மனதில் குறையத் தொடங்கும்.  ஆசை குறைந்தால் ஆண்டவனை  எளிதாக அடைய முடியும்.
*நல்லொழுக்கம், மன அடக்கம், இரக்கம், மக்கள் சேவை போன்ற உயர்ந்த பண்புகளுடன் வாழ்வதே தெய்வீக வாழ்வாகும்.
*எந்த நிலையிலும் உண்மையைப் பேசுங்கள். இனிமையும் அதில் கலந்திருக்கட்டும். எல்லா உயிர்களையும் கடவுளின் அம்சமாகக் கருதுங்கள்.
*எண்ணம், பேச்சு, செயல் மூன்றிலும் மனிதன் துõய்மையைக் கடைபிடிக்க வேண்டும். உங்களின் அந்தரங்க வாழ்வும் பரிசுத்தமானதாகவே இருக்க  வேண்டும்.
*சமுதாயமே புகழும் விதத்தில் நற்செயல்களில் ஈடுபடுங்கள். இந்த பண்பு ஒன்றே  நல்லொழுக்கத்திற்கு துணையாக நிற்கும்.
*பன்னிரண்டு ஆண்டுகள் மனதாலும், பேச்சாலும் உண்மையை மட்டும் பேசுபவனுக்கு வாக்குசித்தி உண்டாகும். அவன் சொன்னதெல்லாம் பலி க்கத் தொடங்கும்.
*சத்தியம் இருக்கும் இடமே கடவுள் இருக்குமிடம். அங்கு எல்லா நல்ல குணங்களும் நிறைந்திருக்கும்.
*பகைவரையும் நேசிக்கக் கற்றுக் கொள்ளுங்கள். யாரையும் பழிக்குப் பழி வாங்கும் எண்ணம் வேண்டாம். அன்பே பகையை வெல்லத் தக்க  ஒரே  ஆயுதம்.
*நல்லதையே கண்களால் காணுங்கள். காதால் கேளுங்கள். மனதால் சிந்தியுங்கள். நீங்கள் எங்கு சென்றாலும் அங்கு தெய்வீகச் சூழ்நிலை உரு வாகும்.
*தேவைகளைக் குறைத்துக் கொள்ளுங்கள். இருப்பதைக் கொண்டு திருப்தியுடன் வாழுங்கள். செய்யும் தவறுகளைத் திருத்திக் கொள்வதில்  அக்கறை காட்டுங்கள்.
*வாழ்க்கையில் எளிமையும், குறிக்கோளில் உயர்ந்த சிந்தனையும் கொண்டவராக இருங்கள். கடமையைச் செய்வதில் ஒருபோதும் பின்வா ங்காதீர்கள்.
*தினமும் அரைமணி நேரம் உடற்பயிற்சி செய்யுங்கள் அல்லது சுறுசுறுப்பான விளையாட்டில் ஈடுபடுங்கள். நீண்ட துõர நடைப்பயிற்சி ÷ மற்கொள்வதும் நல்லது.
*நேர்மையை உயிராக மதியுங்கள். உழைப்பினால் கிடைத்த பணத்தில் வாழ்வு நடத்துங்கள். நியாயமற்ற வழியில் கிடைக்கும் பரிசு, பணம், பொ ருளை ஒருபோதும் ஏற்க வேண்டாம்.
*திறந்த மனதுடன் அனைவரிடமும் பழகுங்கள். ஒளிவுமறைவின்றி நம்பகத்தன்மை உள்ளவராக நடந்து கொள்ளுங்கள். இதனால் அனைவரின்  போற்றுதலுக்கும் உரியவராக விளங்குவீர்கள்.

பகிர்க copied
 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »

வெள்ளி வியாபாரி அக்டோபர் 28,2026

வியாபாரி ஒருவர் பழைய பாத்திரங்களை கிலோ ரூ.50க்கு வாங்குவதாக கூவிக் கொண்டு போனார். பேராசை கொண்ட அமலா, ... மேலும்
 

பொறுப்பு அக்டோபர் 28,2026

பண்டிகை நாளில் இரவில் பார்ட்டிக்கு செல்வதே மகிழ்ச்சி என பலர் நினைக்கின்றனர்.  குடும்பச்சூழலை ... மேலும்
 

சிரித்த முகம் அக்டோபர் 28,2026

* சிரித்த முகத்துடன் இருப்பவரே தொழிலில் வெற்றி பெறுவர். * நல்ல மனைவியும், உடல்நலமும் அமைவது வரம்.  * ... மேலும்
 

நன்மை அக்டோபர் 28,2026

புதிய முயற்சியில் ஈடுபடும் போது ஆர்வமாக செயல்படுவது இயல்பு. நாளடைவில் அதுவே குறைந்து விடும். அதனால் ... மேலும்
 

பெற்றோருக்கு... அக்டோபர் 28,2026

ஒழுக்கம், பணிவு,  துணிவு இவற்றை சிறுவயதிலேயே குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுங்கள்.  ‘நல்ல குணம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar