பதிவு செய்த நாள்
17
நவ
2016
12:11
சென்னை: கோவில் திருப்பணி, கலை பொருட்கள் பாதுகாப்பு சார்ந்த நிபுணர்கள், டிச., 15 வரை விண்ணப்பிக்கலாம் என, அறநிலையத் துறை அறிவித்துள்ளது. இது குறித்து, அறநிலையத் துறை கமிஷனர் வீரசண்முக மணி வெளியிட்டுள்ள அறிவிப்பு:கோவில்களில், திருப்பணி மேற்கொள்ளுதல், கலை பொக்கிஷங்கள், பண்பாட்டு சின்னங்களை பராமரித்தல் தொடர்பாக, நிபுணர்களின் கருத்துக்களை பெற்று, முறையாக செயல்படுத்த அறநிலையத்துறை முடிவு செய்துள்ளது. அதற்காக, பல துறைகளில் அனுபவம் வாய்ந்த நிபுணர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். இதற்கு, நவ., 15க்குள் விண்ணப்பிக்க வேண்டும் என, அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது, இதற்கான அவகாசம், டிச., 15 வரை நீடிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பங்களை, www.tnhrce.org என்ற இணைய தளத்தில், பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இவ்வாறு அறிவிப்பில் கூறியுள்ளார்.