கோவை: ராமானுஜரின் ஆயிரமாவது ஆண்டு விழாவை முன்னிட்டு, கோவையில் நேற்று பக்தர்களின் ஆன்மிக ஊர்வலம் நடந்தது. கோவை பெரியகடைவீதி, லட்சுமி நாராயண வேணுகோபால சுவாமி கோவிலில், நவ.,11ல் நாமசங்கீர்த்தனத்துடன், விழா துவங்கியது. ஸ்ரீரங்கம், ஸ்ரீரங்கநாராயண ஜீயர் சுவாமிகளின் சொற்பொழிவு நடந்தது. நிறைவு நாளான நேற்று ஸ்ரீமத் ராமானுஜர் திருவுருவம் எழுந்தருளச்செய்து, திருமஞ்சனம் செய்து, சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. இரவு 7:00 மணிக்கு, வெள்ளலுார் ஞானானந்த சத்குரு கருப்பண்ண மகராஜ் சீடர்களின், பண்டரி பஜனையோடு, ராமானுஜர் வீதிஉலா நிகழ்ச்சி நடந்தது. பஜனை கோஷ்டியோடு புறப்பட்ட ஆன்மிக ஊர்வலம், முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் கோவிலை அடைந்தது.