பதிவு செய்த நாள்
18
நவ
2016
12:11
திருப்பூர்: சிவன்மலை கோவில் உண்டியலில், 31 லட்சம் ரூபாயை, பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனர். காங்கயம், சிவன்மலை சுப்ரமணிய சுவாமி கோவிலில், நிரந்தர உண்டியல்கள், அன்னதான உண்டியல்கள் உள்ளன. 500 மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுக்கள் செல்லாததாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், உடனடியாக கோவில் உண்டியல்களை திறந்து எண்ணி, வங்கிகளில் செலுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. சிவன்மலை சுப்ரமணிய சுவாமி கோவில் உண்டில், நேற்று முன்தினம் திறந்து எண்ணப்பட்டன. அறநிலையத்துறை உதவி கமிஷனர்கள் ஹர்ஷினி, முருகையன், செயல் அலுவலர் பசவராஜ் மற்றும் அதிகாரிகள் முன்னிலையில் உண்டியல் காணிக்கை எண்ணிக்கை நடைபெற்றது. இதில், 31 லட்சத்து 13 ஆயிரத்து, 162 ரூபாய், ரொக்கமாக இருந்தது. தங்க நகைகள், 365 கிராம்; வெள்ளி நகைகள், 340 கிராம் இருந்தது. கடந்த ஜூன் மாதம், உண்டியல் எண்ணிக்கையின் போது, 22 லட்சம் ரூபாய் காணிக்கையாக இருந்த நிலையில், தற்போது, 31 லட்சம் ரூபாய் இருந்தது குறிப்பிடத்தக்கது.