ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயில் உண்டியல் திறப்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
18நவ 2016 12:11
ஸ்ரீவில்லிபுத்துார். ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயில் உண்டியல் திறப்பில் வழக்கத்தை விட கூடுதலாக ரூ.500 மற்றும் ஆயிரம் நோட்டுகள் காணிக்கையாக செலுத்தப்பட்டிருந்தது. நேற்று முன்தினம் காலை ஆண்டாள் கோயில் மற்றும் வடபத்ரசயனர் கோயில்களில் வைக்கப் பட்டிருந்த பல உண்டியல்கள் திறக்கப்பட்டு, அறநிலையத்துறை அதிகாரிகள், கோயில் அலுவலர்கள் மற்றும் தன்னார்வலர்கள் கொண்டு எண்ணப்பட்டது. ரொக்கமாக ரூ. 14 லட்சத்து 3 ஆயிரத்து 326 , 71 கிராம் தங்கம், 200 கிராம் வெள்ளி காணிக்கையாக கிடைத்தது. வழக்கமாக இருக்கும் ஐநுாறு மற்றும் ஆயிரம் ரூபாய் தாள்களை விட தற்போது கூடுதலாக இருந்தது.