பதிவு செய்த நாள்
18
நவ
2016
12:11
திருத்தணி : வீர ஆஞ்சநேயர் கோவில் வளாகத்தில், பக்த ஆஞ்சநேயர், சீதா, ராமர் மற்றும் லட்சுமணன் சிலைகள் பிரதிஷ்டை மற்றும் கும்பாபிஷேகம், வரும், 20ம் தேதி நடக்கிறது. திருத்தணி, மேட்டுத் தெருவில், வீர ஆஞ்சநேயர் கோவில் வளாகத்தில், பக்த ஆஞ்சநேயர், சீதா, ராமர் மற்றும் லட்சுமணன் சிலைகள் பிரதிஷ்டை செய்வதற்கு தனியாக சன்னிதி அமைக்கப்பட்டது. இந்த சிலைகள், வரும் 20ம் தேதி காலை, பிரதிஷ்டை செய்யப்படுகிறது. தொடர்ந்து, சிலைகளுக்கு கலச நீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடத்தப்படுகிறது. தொடர்ந்து, 108 பால்குட ஊர்வலம் நடைபெறுகிறது.