பதிவு செய்த நாள்
18
நவ
2016
12:11
திருவாலங்காடு : வடாரண்யேஸ்வர சுவாமி கோவிலில், வரும், 26ம் தேதி, தெப்ப திருவிழா நடைபெறுகிறது. திருத்தணி முருகன் துணை கோவிலான வடாரண்யேஸ்வர சுவாமி கோவில், திருவாலங்காட்டில் உள்ளது. இக்கோவில், சிவபெருமான் திருநடனம் ஆடிய ஐந்து திருச் சபைகளில், முதற்சபையான ரத்தின சபையாக விளக்குகிறது. ஆண்டுதோறும், கார்த்திகை மாதம், சுவாதி நட்சத்திரத்தில் தெப்ப திருவிழா நடைபெறுகிறது. அந்த வகையில், நடப்பாண்டில், வரும், 26ம் தேதி, சுவாதி நட்சத்திரத்தில், ஆலங்காட்டீசர் ஆலய சென்றாடு தீர்த்தக்குளத்தில், தெப்பலில், வண்டார்குழலியம்மை உடனாய வடாரண்யேஸ்வர சுவாமி எழுந்தருளிகிறார். பின், இரவு 7:00 மணிக்கு, அங்கு சிறப்பு பூஜைகள் மற்றும் தீபாராதனை நடத்தப்பட்டு, தெப்பத்தில் வடாரண்யேஸ்வர சுவாமி மூன்று முறை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.