திருச்சோபுரம் மங்களேஸ்வரர் திருக்கோயிலில் உள்ள தட்சிணாமூர்த்தியின் சிலையைத் தட்டினால் சப்தஸ்வர ஓசை கேட்கிறது. இவருக்கு மஞ்சள் வண்ண ஆடை அணிவிக்காமல், வெள்ளை வஸ்திரம் சாத்துகின்றனர். வழக்கத்திற்கு மாறாக இடது கையில் நாகம், வலது கையில் அக்னி என மாற்றி வைத்துள்ளார்.