வேத பாராயணம் என்பது ஆண், பெண் அனைவருக்கும் உரியதுதான். வேத காலத்தில் யாகங்களின் போது சாம வேதத்தை இசை வடிவில் கீதங்களாக முதன் முதலில் பெண்கள் தான் பாடினார்கள். அவர்களிடமிருந்து அவ்விதம் பாடுவதை அவர்களின் கணவன்மார்கள் கற்றுக்கொண்டார்கள் என்பதை, சதபத பிராம்மணங்கள் விளக்குகின்றன. எனவே, பெண்கள் வேத பாராயணம் செய்யலாம்.