ஊட்டியிலிருந்து 3 கி.மீ. தொலைவில், திருக்காந்தலில் உள்ளது காசி விஸ்வநாதர் கோயில். இயற்கையிலேயே பூணூல் அணிந்தது போன்ற ரேகை அமைப்பு படர்ந்திருப்பது பாணலிங்கம், ஆயிரம் கல் சிவ லிங்கத்துக்கு, ஒரு ஸ்படிக லிங்கம் சமம். 12 லட்சம் ஸ்படிக லிங்கங்களுக்கு ஒரு பாணலிங்கம் சமம் என்பர். பாண லிங்கம் வடித்தெடுக்கப்படுவதில்லை. இந்த பாண லிங்கங்கள் நர்மதை நதியிலிருந்துதான் பெருமளவுக்குக் கிடைக்கின்றன. மிக அபூர்வமான இத்தகைய சிறப்பு வாய்ந்த பாணலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்ட திருக்கோயில் காசி விஸ்வநாதர் கோயில்.