அனுப்பர்பாளையம் : திருப்பூர், அடுத்த பெருமாநல்லூர் கொண்டத்து காளியம்மன் கோவிலில் ஐந்து லட்சம் ரூபாய் உண்டில் காணிக்கை வசூலாகி இருந்தது. பெருமாநல்லூரில் பிரசித்தி பெற்ற கொண்டத்து காளியம்மன் கோவில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி, நேற்று நடந்தது. அறநிலையத்துறை உடுமலை ஆய்வாளர் சண்முகசுந்தரம், பொள்ளாச்சி ஆய்வாளர் பொன்னுதுரை முன்னிலையில் உண்டியல் திறக்கப்பட்டது. போயம் பாளையம் மகா விஷ்ணு சேவா சங்கத்தினர் மற்றும் பக்தர்கள் காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்டனர். அதில், மொத்தம், 4,56,692 ரூபாய் ரொக்கமும், 30 கிராம் தங்கம், 98 கிராம் வெள்ளி ஆகியன இருந்தது. இதில், இரண்டு லட்ச ரூபாய்க்கு, 500 ரூபாயாக பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி இருந்தனர்.