சின்னாளபட்டி சின்னாளபட்டி அஞ்சலி வரத ஆஞ்சநேயர் கோயிலில், நவமியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. முன்னதாக ஆஞ்சநேயர், உற்சவர் கோதண்டராமருக்கு திரவிய அபிஷேகம் நடந்தது. விசேஷ மலர் அலங்காரத்துடன் மகா தீபாராதனை நடந்தது. சுற்றுப்புற கிராமங்களைச்சேர்ந்த பக்தர்கள் பங்கேற்றனர். * செம்பட்டி கோதண்டராமர் கோயிலில், நவமி சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தது.