Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
இதுவல்லவா பக்தி! நம்பிக்கையை விடவே விடாதே!
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
அடி கொடுத்தவர் பிட்டு தரவில்லையே!
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

24 நவ
2016
05:11

எல்லாம் தாமே என்பதை ஈஸ்வரன் அறிந்திருக்கிறார். ஆனாலும், அவரை வேறாக நினைத்திருக்கிற ஜீவர்களை அவரும் வேறு போல பார்த்து வேடிக்கையும் செய்வார். இதைப்பற்றி ஸ்ரீநீலகண்டதீட்சிதரின் சிவலீலார்ணவத்தில் ஓர் அழகான ஸ்லோகம் உண்டு. பரமேஸ்வரன் கூலியாளாக வந்து பிட்டுக்கு மண் சுமந்த கதை எல்லோருக்கும் தெரியும். அவர் உடைப்பு அடைத்து ஒழுங்காக வேலை செய்யாததைக் கண்டு பாண்டியராஜா அவரைப் பிரம்பால் அடித்தான். அந்தப் பிரம்படி பாண்டியன் உள்பட சகலஜீவராசிகள் மீதும் விழுந்தது. இங்கே தாமே எல்லாமும் என்பதை அவர் காட்டி விட்டார். இதைப் பார்த்து கவி கேட்கிறார்,  அது சரி! உன்னைத் தவிர வேறில்லை என்ற சிவாத்வைதம் பிரம்படிக்கு மட்டும் தானா? நீ மதுரமான பிட்டை வாங்கித் தின்றாயே, அப்போது மட்டும் ஏன் எல்லா ஜீவராசிகளுக்கும் அதை உண்ட ஆனந்தம் இல்லை? அடிபடும்போது ஒன்று; ஆனந்தத்தின் போது வேறா?  சுவாமி உள்ளே அடங்கிய பிரம்மமாகவும், வெளியே காரியம் செய்கிற ஈஸ்வரனாகவும் இருப்பதை இந்த ரசமான கேள்வி மூலம் தெரிந்து கொள்கிறோம்.அவர் செய்கிற காரியங்களை, பஞ்ச கிருத்யம் என்று ஐந்தாகச் சொல்வார்கள். இதில் மாயையால் மறைக்கிற காரியம் திரோதானம் எனப்படும். இந்த மாயையில் இருந்து விடுவிப்பதே, அவர் செய்கிற மகா பெரிய காரியம், அநுக்கிரகம். விளக்கம்: உலகத்தில் பிறந்தது பெரிய அடி. ருசியான பிட்டு என்பது வாழ்வில் அவ்வப்போது கிடைக்கும் தற்காலிக இன்பங்கள். தற்காலிக இன்பம் என்பதே மாயை . பிறவி என்ற அடி மட்டும் தான் நினைவில் இருக்க வேண்டும். அந்த அடியில் இருந்து தப்பிக்கிற வழியைப் பார்க்க வேண்டும்.

பகிர்க copied
 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »

வெள்ளி வியாபாரி அக்டோபர் 28,2026

வியாபாரி ஒருவர் பழைய பாத்திரங்களை கிலோ ரூ.50க்கு வாங்குவதாக கூவிக் கொண்டு போனார். பேராசை கொண்ட அமலா, ... மேலும்
 

பொறுப்பு அக்டோபர் 28,2026

பண்டிகை நாளில் இரவில் பார்ட்டிக்கு செல்வதே மகிழ்ச்சி என பலர் நினைக்கின்றனர்.  குடும்பச்சூழலை ... மேலும்
 

சிரித்த முகம் அக்டோபர் 28,2026

* சிரித்த முகத்துடன் இருப்பவரே தொழிலில் வெற்றி பெறுவர். * நல்ல மனைவியும், உடல்நலமும் அமைவது வரம்.  * ... மேலும்
 

நன்மை அக்டோபர் 28,2026

புதிய முயற்சியில் ஈடுபடும் போது ஆர்வமாக செயல்படுவது இயல்பு. நாளடைவில் அதுவே குறைந்து விடும். அதனால் ... மேலும்
 

பெற்றோருக்கு... அக்டோபர் 28,2026

ஒழுக்கம், பணிவு,  துணிவு இவற்றை சிறுவயதிலேயே குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுங்கள்.  ‘நல்ல குணம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar