கார்த்திகை மாத துவாதசி நாளில் துளசிதேவி மகாவிஷ்ணுவை திருமணம் செய்துகொண்டதாக ஐதிகம். எனவே, கார்த்திகை மாதத்தில் துளசி தளங்களால் அர்ச்சித்து மகாவிஷ்ணுவை வழிபடுவது சிறப்பு. அர்ச்சனை செய்யப்படும் ஒவ்வொரு துளசி தளத்துக்கும் ஒவ்வொரு அஸ்வமேத யாகம் செய்த பலன் உண்டு என்பர். துளசி மாலை அணிபவர்களிடம் மகாலட்சுமி எப்போதும் வாசம் செய்வாள் என்று சாஸ்திரம் கூறுகிறது.