பதிவு செய்த நாள்
05
டிச
2016
02:12
இடைப்பாடி: சித்தூர் புதூரில் உள்ள கோவில் கும்பாபிஷேகம் முன்னிட்டு, பூலாம்பட்டி காவிரி ஆற்றில் இருந்து, ஏராளமான பக்தர்கள் புனிதநீர் எடுத்து வந்தனர். இடைப்பாடி அருகே, சித்தூர் புதூரில், சக்தி விநாயகர், சக்தி காளியம்மன் கோவில்களின் கும்பாபிஷேகம் இன்று நடக்கிறது. அதையொட்டி, கோபுர கலசங்களுக்கு புனிதநீர் தெளிக்க, 1,000க்கும் மேற்பட்ட பக்தர்கள்,
பூலாம்பட்டி காவிரி ஆற்றில் இருந்து, புனிதநீர் கொண்டு வந்தனர். பூலாம்பட்டியில் இருந்து புறப்பட்ட பக்தர்கள், 5 கி.மீ., தூரம் நடந்து, தீர்த்தக்குடங்களை கொண்டு வந்தனர்.