செஞ்சி: செஞ்சியில் மதுரகவி ஆழ்வார் சபை மாத மாநாடு நடந்தது. செஞ்சி வட்ட மதுரகவி ஆழ்வார் திருநட்சத்திர பரிபாலன சபையின் மாதாந்திர மாநாடு ஏ.என்.ஏ., மினி ஹாலில் நடந்தது. சபை தலைவர் வேணுகோபால் தலைமை தாங்கினார். துணை தலைவர் டாக்டர் ரமேஷ்பாபு முன்னிலை வகித்தார். செயலாளர் உறுப்பினர் செந்தாமரை திருமால் துதி பாடினார். ராமதாஸ் வரவேற்றார். கீதை தந்த கேச வன் தலைப்பில சோழந்தாங்கல் ஜெயகாந்தனும், கண்ணிநுான் சிறுத்தாம்பு தலைப்பில் வளையசெட்டிகுளம் ரகுபதியும் சிறப்புரை நிகழ்த்தினர்.