பதிவு செய்த நாள்
05
டிச
2016
02:12
ஈரோடு: சின்ன மாரியம்மன் கோவில் திருவிழாவில், ஏராளமான பக்தர்கள் தீ மிதித்தனர். ஈரோடு, கருங்கல்பாளையம் சின்னமாரியம்மன், பெரிய மாரியம்மன் கோவில் குண்டம் திருவிழா, கடந்த, 22ல் பூச்சாட்டுதலுடன் துவங்கியது. இந்நிலையில் தீ மிதிக்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. அதிகாலை முதல் காத்திருந்த ஏராளமான பக்தர்கள், குண்டம் இறங்கி நேர்த்திக் கடன் செலுத்தினர். குண்டம் இறங்கிய பக்தர்களுக்கு, அன்னதானம் வழங்கப்பட்டது. இதை தொடர்ந்து தேர்வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடந்தது. இன்று, கரகம் எடுத்தல், நாளை (6ம் தேதி) பொங்கல் வைத்தல், மாவிளக்கு ஊர்வலம், 7ல் கம்பம் எடுத்தல், 8ல் மஞ்சள் நீராட்டத்துடன் விழா நிறைவு பெறுகிறது.