பவானி: பவானி அருகே, கோவில் கும்பாபிஷேக விழா நடந்தது. பவானி, சேர்வராயன்பாளையம், வீரமாத்தியம்மன் கோவில், அதில் அமைந்துள்ள விநாயகர், முருகன் பரிவார தெய்வங்களுக்கு கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. முன்னதாக, கணபதி ஹோமத்துடன் விழா துவங்கியது. நேற்று காலை, 8:00 மணிக்கு, வீரமாத்தியம்மன் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு கும்பாபிஷேகம் நடந்தது. இதில், சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.