Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
வருண பகவானுக்கு சிறப்பு பூஜை க.பரமத்தி விநாயகர் கோவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சிதிலமடைந்த சிவன் கோவில் ஒருகால பூஜையாவது நடக்குமா?
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

05 டிச
2016
02:12

குளித்தலை: மேட்டு மருதூர் சிவன் கோவில் சிதிலமடைந்து காணப்படுவதால், இந்துசமய அறநிலையத்துறையினர், ஒருகால பூஜைக்காவது ஏற்பாடு செய்ய, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

குளித்தலை அடுத்த மருதூர் டவுன் பஞ்., மேட்டு மருதூரில், 1,112 ஆண்டுகள் பழமையான, ஆறா அமுதீஸ்வர் கோவில் உள்ளது. இந்தசமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் இருந்தாலும், முறையான பராமரிப்பு இல்லை. கோவிலுக்கு சொந்தமான, 25 ஏக்கர் நிலம் உள்ளது. இதன் மூலம் வரும் வருவாயை கொண்டு, கோவில் நிர்வாகம் சார்பில், ஒருகால பூஜை கூட நடப்பதில்லை. முக்கிய நாட்களில், கோவில்களில் சிறப்பு பூஜைகள் மட்டும் நடக்கிறது. கரூர் மாவட்ட முன்னாள் கலெக்டராக இருந்த வெங்கடேசன், இக்கோவிலை பார்வையிட்டு, தஞ்சை பெரிய கோவில் கட்டப்பட்ட காலத்தில் கட்டப்பட்டதாகவும், சிறப்பு வாய்ந்த சிவன் கோவிலை புதுப்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதியளித்தார். ஆனால், பூர்வாங்க பணிகள் எதுவும் நடக்கவில்லை. அடுத்தடுத்து வந்த கலெக்டர்களும், கோவில் புனரமைப்பு, ஒருகால பூஜைகளுக்கு ஏற்பாடு செய்யவில்லை என்ற புகார் உள்ளது. எனவே, இந்துசமய அறநிலையத்துறையினர் தலையிட்டு, கோவிலில், ஒருகால பூஜையாவது நடக்க, ஏற்பாடு செய்ய வேண்டுமென, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தீபாவளிக்கு முந்தைய நாள் எம தீபம் ஏற்றுவது நம் மரபு. எம தீபம் ஏற்றினால் குடும்பம் விருத்தியாகும். ... மேலும்
 
temple news
இரண்டு பேருக்கு இடையில் மத்தியஸ்தம் செய்பவர் (பிரச்னைக்கு தீர்வு சொல்பவர்) தராசு போல நடுநிலையாளராக ... மேலும்
 
temple news
தீபாவளி நன்னாளில் எண்ணெய் தேய்த்துக் கொள்வதும், நல்ல நீரில் குளிப்பதும் அவசியம். குளிக்கும் நீர் ... மேலும்
 
temple news
நம் மனதில் இருக்கும் பேராசை, பொறாமை, கோபம் போன்ற அழுக்குகளைக் களைந்து, இந்த நாள் முதல் மனிதனாக, புதிய ... மேலும்
 
temple news
கல்விக்கு சரஸ்வதி பூஜை என்றால், செல்வத்திற்கு தீபாவளி எனும் லட்சுமி பூஜை. சரஸ்வதி பூஜை முடிந்து 20 வது ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar