பதிவு செய்த நாள்
05
டிச
2016
02:12
க.பரமத்தி: க.பரமத்தி ஒன்றியம், முன்னூர் பஞ்சாயத்துக்குட்பட்ட ஆதியப்ப கவுண்டன்வலசில் புதிதாக கட்டப்பட்டுள்ள விநாயகர் கோவிலில், இன்று கும்பாபிஷேக விழா நடக்கிறது. முன்னதாக, நேற்று காலை, 10:00 மணிக்கு காவிரி ஆற்றில் இருந்து பக்தர்கள் புனிதநீர் கொண்டு வருதல், மாலை, 6:00 மணிக்கு பல்வேறு யாகங்கள் நடந்தன. தொடர்ந்து, இன்று அதிகாலை, 4:00
மணிக்கு மங்கள இசை, இரண்டாம் கால யாக பூஜை, 6:00 மணிக்கு மேல் விநாயகருக்கு கும்பாபிஷேகம் நடக்கிறது. பின், பக்தர்களுக்கு அன்னதானம் மற்றும் பிரசாதம் வழங்கப்படுகிறது. விழா ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.