பதிவு செய்த நாள்
06
டிச
2016
03:12
கொடுமுடி: கொடுமுடி அருகே, வடக்கு புதுப்பாளையத்தில், காளிங்கராயன் வாய்க்கால் வலது கரையில் அமைந்துள்ள, மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. மேலும், சித்தி விநாயகர் கோவில் மற்றும் அரசமரத்து விநாயகர் கோவில்களிலும் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. கடந்த, 3ல், விநாயகர் வழிபாட்டுடன் யாக சாலை பூஜைகள் தொடங்கின. நேற்று அதிகாலை, 4:00 மணிக்கு, பூர்ணாஹூதி நிறைவடைந்தது. முதலில் சித்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது, தொடர்ந்து காலை, 7:00 மணிக்கு, மகா மாரியம்மன் கோபுர கும்பாபிஷேகம் மற்றும் மூலவர் கும்பாபிஷேகம் நடந்தது.