திருவாடானை, திருவாடானை அருகே சின்னக்கீரமங்கலம் ஐயப்பன் கோயிலில் கும்பாபிஷேகம் நடந்தது. முன்னதாக கணபதி ஹோமம், அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, வாஸ்த்து சாந்தி, அங்குரார்ப்பணம், கடம் ஸ்தாபனம் உள்ளிட்ட சிறப்பு பூஜைகளுடன் யாகசாலை பூஜைகள் நடந்தது. 10:00 மணிக்கு கடம் புறப்பாடு நடந்தது. 10:30 மணிக்கு சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் முழங்க கோபுர கலசம் மீது புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். வாணவேடிக்கை, அன்னதானம் நடந்தது.