Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வெம்பக்கோட்டை சந்தான கிருஷ்ணன் ... மார்கழி பாராயணம் வரும் 16ல் துவக்கம்
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சென்னை ஸ்ரீராமகிருஷ்ண மடத்தின் புதிய திட்டம்
எழுத்தின் அளவு:
சென்னை ஸ்ரீராமகிருஷ்ண மடத்தின் புதிய திட்டம்

பதிவு செய்த நாள்

10 டிச
2016
12:12

சென்னை: ஸ்ரீராமகிருஷ்ண மடம், சனாதன ஆன்மிக தர்மத்தையும், நமது பாரதப் பண்பாட்டையும் பாதுகாத்து மக்களுக்கு விளக்கும் பலவிதமான நூல்களைக் குறைந்த விலையில் வழங்கி வருகிறது.

பாரதத்தின் ஆன்மிக ஞானமும் கலாச்சாரமும் பண்பாடும் யாவரும் அறிய வேண்டியவை. குழந்தைகளும் பெரியோரும் இவற்றைப் புரிந்து கொள்ளும் வகையில் பலவித நூல்களாக வெளியிடும் புண்ணியமான பணியினை ஸ்ரீராமகிருஷ்ண மடம் தொடர்ந்து ஆற்றி வருகிறது.

உலகம் முழுவதும் உள்ள ஆன்மிக அன்பர்கள் பலரும் பலனடைந்து வரும் இப்பணி தளராமல் தொய்வின்றி நடைபெறுவதற்கு சுமார் 6.5 கோடி ரூபாய் (ஒரு மில்லியன் டாலர்) வரையிலான பெரும் நன்கொடை தேவைப்படுகிறது.

சகல விதத்திலும் விலையேற்றம் வந்துவிட்ட சூழ்நிலையில் மடத்து வெளியீடுகளின் விலையை ஏற்றாமல் தொடர்ந்து இப்பணியினைப் புரிந்திட குறைந்தது ரூ.5000/ டாலர் 100 வரையிலான உங்களது நன்கொடை உதவிகரமாக இருக்கும் என்பது ஸ்ரீராமகிருஷ்ண மடத்தின் விருப்பம்.

ஸ்ரீராமகிருஷ்ண மடம் பதிப்பகத்தின் முக்கிய அம்சங்கள்:

*ஆதாரபூர்வமான ஆன்மிக நூல்கள்
*நடைமுறைக்கேற்ற சமய நூல்கள்
*108 வருடங்களாகத் தொடர்ந்து சேவையாற்றும் பதிப்பகம்
*485 தலைப்புகளில் தமிழ் நூல்கள்
*450 தலைப்புகளில் ஆங்கில நூல்கள்
*30 தலைப்புகளில் சம்ஸ்கிருத நூல்கள்
*96 ஆண்டுகளாகத் தொடர்ந்து வெளிவரும் ஸ்ரீராமகிருஷ்ண விஜயம்-சர்குலேஷன் 1,65,000
*103 ஆண்டுகளாக வெளிவரும் வேதாந்த கேசரி-12,000 சர்குலேஷன்

ஸ்ரீராமகிருஷ்ண மடம் நூல்களின் முக்கிய கருத்துகள்:

*இளைஞர்களுக்கான இந்தியப் பாரம்பரியமும் பண்பாடும்
*யோகமும் தியானமும்
*இளைஞர்கள் நல மேம்பாடு
*நவீன மேலாண்மை
*சிறுவர்களுக்கான படக்கதைகள்
*வாழ்வில் சுயமுன்னேற்றம் முதல் ஆன்மிக வாழ்வில் சுயதரிசனம் வரை
*இந்து மதத்தின் பல்வேறு பிரிவுகள்
*இன்றைய நவீன சவால்களுக்கு இந்தியப் பாரம்பரிய பதில்கள்
*சமய நூல்களின் மொழிபெயர்ப்புகள்

எல்லா நன்கொடையாளர்களுக்கும் பதிவிறக்கம் செய்யக்கூடிய சுவாமி விவேகானந்தரின் மூன்று சொற்பொழிவுகளைக் கொண்ட ஆடியோ புக் மடத்தின் ஆசியாக வழங்கப்படும். ஸ்ரீராமகிருஷ்ணர் தங்களுக்கு அனைத்து நலனையும் தந்தருள ஸ்ரீராமகிருஷ்ண மடம் பிரார்த்தித்துக் கொள்கிறது.

தொடர்புக்கு:

-சுவாமி கௌதமானந்தர், தலைவர்,
 ஸ்ரீராமகிருஷ்ணமடம்,
31, ஸ்ரீராமகிருஷ்ண மடம் சாலை, மயிலாப்பூர்,
சென்னை-600 004.
+91 82208 22026, +91 99401 92401.

BANK DETAILS:

Name ofthe Account:
Sri Ramakrishna Math, Mylapore. Chennai;
Bank: UNITED BANK OF INDIA;Mylapore, Chennai&4.
A/C Number: 1511010100001
Bank Code No: 600027009; IFSC: UTBIOSRM842.
Foreign contribution:
Syndicate Bank, Mylapore Branch, Chennai& 600 004. (T.N.), India.
IFS CODE: SYNB0006015. A/C. Number: 60152010000907
Swift code: SYNBINBB031

இணைய தளத்தின் மூலமாகவும் நன்கொடைகளைச் செலுத்தலாம்:

www.chennaimath.org
mail@chennaimath.org

facebook.com/ramakrishnamath
twitter.com/ramakrishnamath

நன்கொடைகளுக்கு இந்திய வருமான வரிச் சட்டம் 80ஜி பிரிவின்படி வரி விலக்கு உண்டு.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்புத்தூர்; திருப்புத்தூர் திருத்தளிநாதர் கோயில், ந.வைரவன்பட்டி வளரொளிநாதர் கோயில்களில் ... மேலும்
 
temple news
திருப்பதி; திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயில் வருடாந்திர பிரம்மோற்சவத்தில் இன்று மோகினி ... மேலும்
 
temple news
திருப்பதி;  ஜனாதிபதி திரௌபதி முர்மு திருமலையில் உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வர சுவாமி இன்று தரிசனம் ... மேலும்
 
temple news
டில்லி; டில்லியில் விஜய யாத்திரை மேற்கொண்டுள்ள சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீட ஜகத்குரு ஸ்ரீ விதுசேகர பாரதீ ... மேலும்
 
temple news
கோவை;  கார்த்திகை மாதம் அனுஷம் நட்சத்திரத்தை முன்னிட்டு கோவை வடவள்ளி கஸ்தூரி நாயக்கன்பாளையம் கே. எஸ். ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar