Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அண்ணாமலையாருக்கு அரோகரா’ ... பழநியில் குவிந்த பக்தர்கள்: மூன்று மணிநேரம் காத்திருப்பு பழநியில் குவிந்த பக்தர்கள்: மூன்று ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
குத்தாலத்தில் கார்த்திகை கடைஞாயிறு தீர்த்தவாரி உற்சவம்!
பகிர்க copied
எழுத்தின் அளவு:
குத்தாலத்தில் கார்த்திகை கடைஞாயிறு தீர்த்தவாரி உற்சவம்!

பதிவு செய்த நாள்

12 டிச
2016
09:12

மயிலாடுதுறை: நாகை மாவட்டம் குத்தாலத்தில் நடைபெற்ற கார்த்திகை கடைஞாயிறு தீர்த்தவாரியை முன்னிட்டு காவிரிக்கரையில் சிவ, வைணவ ஸ்தலங்களிலிருந்து பஞ்சமூர்த்திகள் எழுந்தருளினர். காவிரியில் நீர்இல்லாததால் மோட்டார் மூலம் தண்ணீர் இறைக்கபட்டு,தீர்த்தவாரி நடைபெற்றது.

வித்துன்மாலி என்ற அரக்கன் சிவபெருமான் அருளால் சூரியனை போல ஓளி படைத்த கிரகமாக மாறினான். இதனால் சூரியனால் பூமிக்கு ஓளி வழங்க முடியாமல் போனது. இதனையடுத்து தான் இழந்த சக்தியையும், சிவபெருமான் அருளை பெ றவும் குத்தாலத்தில் உள்ள காவிரியில் புனிதநீராடி தவமிருந்து அசுரனிடமிருந்து துன்பம் நீங்கப்பெற்ற நாள் கார்த்திகை மாத கடைசி ஞாயிறு என்பது ஐதீகம். அதனை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாத கடைஞாயிறு அன்று சிவ, வைணவ தலங்களிலிருந்து பஞ்சமூர்த்திகள் காவிரி கரையில் எழுந்தருளி தீர்த்தவாரி நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு கார்த்திகை மாத கடைசி ஞாயிற்று கிழமையை முன்னிட்டு ஸ்ரீ அரும்பனவனமுல்லை நாயகி சமேத ஸ்ரீ உக்தவேதீஸ்வரர்,ஸ்ரீ ஆனந்தவல்லி சமேத ஸ்ரீ ஓம்காளீஸ்வரர், ஸ்ரீ சௌந்தரநாயகி சமேத ஸ்ரீ சோழீஸ்வரர், ஸ்ரீ மன்மதீஸ்வரர், ஸ்ரீ செங்கமலத்தாயார் சமேத ஆதிகேசவ பெருமாள் ஆகிய 5 ஆலயங்களில் இருந்து பஞ்ச மூர்த்திகள் மங்கள வாத்தியங்கள் ஒலிக்க வீதி உலாவாக வந்து காவிரி கரையில் எழுந்தருளினர். அங்கு அஸ்திரதேவர்க்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டு, தீர்த்தவாரி உற்சவம் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர். காவிரியில் தண்ணீர் இல்லாமல் தேக்கி வைக்கப்பட்ட நீரில் புனித நீராடியது பக்தர்களை வேதனையடைய செய்தது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
 சென்னை: ஸ்ரீ வியாசராஜ மடம் சார்பில், தஸமனோத்ஸவம் அதாவது பத்து ஆண்டுகளான பீடத்தை அலங்கரிக்கும் ... மேலும்
 
temple news
அழகர்கோவில்: அழகர்கோவில் கள்ளழகர் கோயிலில் புரட்டாசி குடை திருவிழாவை முன்னிட்டு தங்க கருட வாகனத்தில் ... மேலும்
 
temple news
செஞ்சி: செஞ்சி கோட்டை வெங்கட்ரமணர் கோவிலில் நடந்த திருக்கல்யாண உற்சவத்தில் ஆயிரக்கணக்கான ... மேலும்
 
temple news
பழநி: பழநி வன்னி விநாயகர் கோயில் நிர்வாகம், தமிழ்நாடு பிராமண ஸமாஜம் சார்பில் வன்னி விநாயகர் கோயிலில் ... மேலும்
 
temple news
பெ.நா.பாளையம்: துடியலூர் அருகே பன்னீர்மடையில் உள்ள உலகளந்த பெருமாள் திருக்கோயில், கிருஷ்ணசாமி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar