பிராணன் என்ற சொல்லுக்கு ‘உயிர்’ என்பது பொருள். பிறப்பதும், இறப்பதுமாகிய உயிர்களுக்கு இது பொருந்தும். தெய்வங்களுக்கு பிறப்பு இறப்பு கிடையாது. குறிப்பிட்ட தெய்வத்தை கும்பம் அல்லது புதிய பிம்பத்தில் வழிபடும் முன்பு, அத்தெய்வ சக்தியை கும்பத்திலோ அல்லது பி ம்பத்திலோ அதற்குரிய பீஜாக்ஷர மந்திரம் மூலம் நிலைநிறுத்தச் செய்வது பிராண பிரதிஷ்டையாகும். நமக்கு உயிர் எப்படி முக்கியமோ அது போல தெய்வத்திற்கு உச்சரிப்பு பிசகாமல் சொல்லும் மந்திரம் முக்கியம். ப்ராணன்– மந்திரம், பிரதிஷ்டை– நிலைநிறுத்துதல் என்பது பிராண பிரதிஷ்டை எனப்படுகிறது.