பதிவு செய்த நாள்
13
டிச
2016
01:12
மகுடஞ்சாவடி: மகுடஞ்சாவடி அருகே, 108 திருவிளக்கு பூஜை, நேற்று நடந்தது. இளம்பிள்ளை, பாலசுப்ரமணியர் கோவிலில், கார்த்திகை முன்னிட்டு, நேற்று, 108 திருவிளக்கு பூஜை, வேத மந்திரங்கள் முழங்க நடந்தது. அதில், வெண்ணெய் பிரசாதம் வழங்கப்பட்டது. அதை, குழந்தைப்பேறு இல்லாத பெண்கள் பயபக்தியுடன் பெற்றனர். கோவில் மண்டபத்தில், வள்ளி, தெய்வானையுடன், பக்தர்களுக்கு முருகன் காட்சியளித்தார். இரவு, 8:00 மணிக்கு கோவில் கமிட்டி சார்பில், மயில் வாகனத்தில், பாலசுப்ரமணி திருவீதி உலா நடந்தது. இதில், ஏராளமானோர் பங்கேற்றனர்.