ஸ்ரீரங்கத்தில், கார்த்திகை பவுர்ணமியன்று தெற்குவாசல் கோபுரம் அருகே ரங்கநாதர் எழுந்தருள்வார். அப்போது அவர் முன்னிலையில் சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்வு நடைபெறும். பிறகு, சந்தன மண்டபத்தில், எழுந்தருளும்போது அரையர்கள் பாசுரங்கள் பாடுவர். மேலும் கார்த்திகை திருநாள் விவரத்தை அப்போது கடிதமாக எழுதி பெருமாளிடம் சமர்ப்பிப்பார்கள் அதனை ஸ்ரீமுகம் என்பர்.