நாகப்பட்டினத்திற்கு அருகில் உள்ள சிக்கல் சிங்கார வேலவர் கோயிலில் கார்த்திகை மண்டபம் இருக்கிறது. கார்த்திகை நாட்களில் சிங்காரவேல் முருகன் இங்கே எழுந்தருளுவார். இது பார்ப்பதற்கு ரம்மியமான கந்தபுராண எழிலோவியங்கள் நிறைந்த மண்டபம். மேலும், இங்கே கார்த்திகை விநாயகர் என்ற பெயரில் ஒரு விநாயகரும் இருக்கிறார். முருகப்பெருமான் எடுத்து வளர்த்த நிதார்த்தினி, அப்ரகேந்தி, மேகேந்தி, வர்தயேந்தி, அம்பா, துலா எனும் கார்த்திகைப் பெண்கள் ஆறுபேரும் இங்கே வந்து, முருகப்பெருமானுடைய வளர்ச்சிக்காக இந்தக் கார்த்திகை விநாயகரை வழிபட்டனர்.