பேட்டைத்துள்ளல் என்பது, நான், எனது என்ற எண்ணங்களை அறவே அகற்றுவதற்காக மட்டுமே. ஒவ்வொரு மனிதனும், ஜாதி, மதம் , இனம், ச மூக அந்தஸ்து இவற்றை அகற்றி, வண்ணம் பூசி நடனமாடி. நாம் எல்லோரும் ஒன்று என்ற எண்ணத்தை பிரதிபலிக்கும் வைபவமே ÷ பட்டைத்துள்ளல். இங்கே வேட்டைபிரியரான சாஸ்தா, வேடவன் உருவத்தில் கிராத சாஸ்தாவாக அருள்பாலிக்கின்றனர். இந்த சாஸ்தா, காட்டில் உள்ள மிருகங்களை மட்டும் வேட்டையாடவில்லை; நம்முள் உள்ள மிருக குணாதிசயங்களையும் வேட்டையாடி, நம்முள் உள்ள நான் என்ற உணர்வை அழித்து, நமக்குள் விழிப்பு உணர்வைப் புகுத்தி, நாம் எல்லோரும் சமம் என்று உணரவைத்து நம்மை நல்ல மனிதர்களாக மாற்றி அருள்கிறார்.