வடலுார்: குறிஞ்சிப்பாடியில் கோலசாமி கோவில் கார்த்திகை தீப விழாவில் சொக்கநாதர் உடன் அமர் மீனாட்சியுடன் பழ அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். குறிஞ்சிப்பாடி தவத்திரு கோலசாமி திருகோவிலில் கார்த்திகை தீப விழா நேற்று நடந்தது. விழாவையொட்டி, காலை மூலவர் சிவபெருமானுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது. தொடர்ந்து மதியம் அன்னதானம் நடந்தது. மாலை கோவில் முழுவதும் அகல் விளக்கு ஏற்றப்பட்டு சொக்கப்பனை கொளுத்தப்பட்டது. அதை தொடர்ந்து இரவு சொக்கநாதர் உடன் அமர் மீனாட்சி வீதியுலா நடந்தது. இதில் சொக்கநாதர் மீனாட்சி பூ மாலைகள் இன்று, ஆப்பிள், ஆரஞ்சு, எலுமிச்சை, அன்னாட்சி, வாழைப்பழம், கொய்யா, மாதுளை, சப்போட்டா உள்ளிட்ட பல்வேறு பழங்களை மாலையாகக் கொண்டு அலங்கரிக்கப்பட்டு வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.