மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் கார்த்திகை தீபம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
14டிச 2016 11:12
அவலுார்பேட்டை: மேல்மலையனுார் கோவிலில் கார்த்திகை தீப தரிசன நிகழ்ச்சி நடந்தது. மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில், கார்த்திகை தீபத்தை முன்னிட்டு காலையில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாரதனை நடந்தது. திருவண்ணாமலை தீப தரிசனைத்தை காணும் வகையில், மாலையில் உற்சவ அம்மன் தென் மேற்கு மூலையில் கொண்டு வந்து அமர்த்தப்பட்டது. பின்னர், திருவண்ணாமலையில் தீபம் ஏற்றியதும், அங்கு அம்மனுக்கு தீபாரதனை காட்டியவுடன், கோவில் உட்பிரகாரத்தில் லட்ச தீபம் ஏற்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
அவலுார்பேட்டை: சித்தகிரி முருகன் கோவிலில் மகா தீபம் ஏற்றப்பட்டது. அவலுார்பேட்டை சித்தகிரி முருகன் கோவிலில் கார்த்திகை தீபத்தை முன்னிட்டு மகாதீபம் ஏற்றப்பட்டது. முன்னதாக முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாரதனை நடந்தது. இதில் திரளாக பக்தர்கள் கலந்து கொண்டனர். இதே போல் வளத்தி மங்களாம்பிகை சமேத மருதீஸ்வரர் கோவிலில், 1608 அகல் விளக்குகளில் தீபம் ஏற்றி, கிராம மக்கள் வழிபாடு நடத்தினர். தீபத்தை முன்னிட்டு அனைத்து கோவில்களிலும் சிறப்பு அபிஷேகம், தீபாரதனை நடந்தது.