சிதம்பரம் நடராஜர் கோவிலில் கார்த்திகை தீப சிறப்பு வழிபாடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
15டிச 2016 11:12
சிதம்பரம்: நடராஜர் கோவிலில் திருகார்த்திகை தீபம் ஏற்றப்பட்டு சிறப்பு தரிசனம் நடந்தது. திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை மாத திருகார்த்திகையையொட்டி மகா தீபம் ஏற்றப்பட்ட மறு நாள் சிதம்பரம் நடராஜர் கோவிலில் கார்த்திகை தீபம் ஏற்படுவது ஐதீகம். இதனையொட்டி சிவகாமசுந்தரி சமேத நடராஜ பெருமானுக்கு நேற்று முன்தினம் சிறப்பு அபிஷேக அலங்காரம் மற்றும் சிறப்பு தீபாராதனை நடைப்பெற்று பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மாலை சுவாமி அம்பாள் சித்சபையில் இருந்து எழுந்தருளி கோவில் பிரகாரம் புறப்பாடு நடந்தது. அப்போது சுவாமி கனகசபை முன்பு எழுந்தருளி, கார்த்திகை தீப விளக்கிற்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டு மகா தீபம் ஏற்பட்டடு சிறப்பு தீபாராதனை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். அதேப்போன்று திருக்கார்த்திகையையொட்டி கீழவீதி வீர ஆஞ்சநேயர் கோவிலில் சிறப்பு பூஜை மற்றும் சிறப்பு வழிப்பாடு நடந்தது. இதனைத் தொடர்ந்து கோவில் வாசல் முன்பு தீபக்காட்சியாக சொக்கப்பானை கொளுத்தப்பட்டது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.