புதுச்சத்திரம்: கார்த்திகையை முன்னிட்டு புதுச்சத்திரம் பகுதியில் உள்ள கோவில்களில் சொக்கப்பனை எரிக்கப்பட்டது. புதுச்சத்திரம் சுற்றுப் பகுதியில் உள்ள கோவில்களில் கார்த்தியை முன்னிட்டு ஆண்டுதோறும் கார்த்திகை இரண்டாம் நாள் சொக்கப்பனை எரிப்பது வழக்கம். அதனையொட்டி நேற்று முன்தினம் இரவு வேளங்கிப்பட்டு வினாயகர் கோவில், சேந்திரக்கிள்ளை விநாயகர், முனியனார், மன்மதன், மாரியம்மன் கோவில்கள், நொச்சிக்காடு மாரியம்மன் கோவில், சந்திரநாயகபுரம் பாலமுருகன் கோவில், சிலம்பிமங்களம் விநாயகர் கோவில் உள்ளிட்ட பல்வேறு கோவில்களில் சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. முக்கிய விழாவான சொக்கப்பனை எரிக்கும் விழா இரவு 7:00 மணிக்கு நடந்தது. இதில் மரங்கள், பனை ஓலையால் கட்டப்பட்டிருந்த சொக்கப்பனையை எரித்தனர். ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். நெல்லிக்குப்பம்: திரவுபதி அம்மன் கோவிலில் கார்த்திகை தீபத்தை முன்னிட்டு விநாயகர் திரவுபதி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும் தீபாராதனையும் நடந்தது. அம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருள சொக்கப்பனை எரிக்கப்பட்டது. பூஜைகளை குணசேகரன், கணேஷ் பூசாரிகள் செய்தனர்.