பள்ளிபாளையம்: பள்ளிபாளையம், ஓங்காளியம்மன் கோவிலில், தண்ணீரில் தீப விளக்கு எரிந்தது. பள்ளிபாளையம் காவிரி கரையோரம், 24 மனை தெலுங்கு செட்டியார்கள், அருள்மிகு ஓம்காளியம்மன் கோவில் உள்ளது. நேற்று முன்தினம் இரவு, கார்த்திகை பவுர்ணமி என்பதால், அம்மனுக்கு சிறப்பு அலங்காரம், பூஜை செய்யப்பட்டது. இதை தொடர்ந்து, பெரிய விளக்கில் தண்ணீரை ஊற்றி, அதில் திரியை போட்டு தீபம் ஏற்றினர். தண்ணீரில், தீபம் சுடர்விட்டு பிரகாசமாக எரிந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.