பதிவு செய்த நாள்
15
டிச
2016
12:12
கிருஷ்ணகிரி: பர்கூர் ஐயப்பன் கோவிலில், 33ம் ஆண்டு மண்டல மகர விளக்கு பூஜை நாளை (டிச.,16) துவங்குகிறது. காலை, 9:00 மணிக்கு, விஷேச ஹோமம், 10:30 மணிக்கு ஐயப்ப சுவாமிக்கு மஹா அபிஷேகம், 12:00 மணிக்கு மஹா தீபாராதனை நடக்கிறது. மாலை, 5:00 மணிக்கு விளக்கு பூஜையும், இரவு, 8:00 மணிக்கு, 18ம் படி பூஜையும் நடக்கிறது. இரண்டாம் நாளான, 17 காலை, 7:00 மணிக்கு கன்னி பூஜை, 9:00 மணிக்கு பஜனை, 10:00 மணிக்கு ஐயப்ப சுவாமிக்கு மஹா அபிஷேகம் நடக்கிறது. மாலை, 6:00 மணிக்கு, சுவாமி திருவீதி உலா நடக்கிறது.