பதிவு செய்த நாள்
15
டிச
2016
12:12
குமாரபாளையம்: தட்டான்குட்டை புருஷோத்தம பெருமாள் கோவிலுக்கு, திருவாரூர் ஜீயர் வந்தார். குமாரபாளையம் அடுத்த, தட்டான்குட்டை புருஷோத்தம பெருமாள் கோவிலுக்கு, நேற்று, திருவாரூர் ராஜகோபால கோவில், மன்னார்குடி சம்பத்குமார ராமானுஜ ஜீயர் சுவாமிகள் வந்தார். அப்போது, அவர் பேசியதாவது: ராமானுஜரின், 1,000வது பிறந்த நாள் விழா, வரும் சித்திரை, திருவாதிரை நட்சத்திர நாளில் கொண்டாடப்படும். நாராயணனின் பெயர் சொல்லும் நாம், வைணவர்கள் தான். அகல்விளக்கு ஏற்றி வைத்து, பிறந்த நாளை கொண்டாட வேண்டும். ஒவ்வொரு பெற்றோரும், தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பும் போது, நெற்றியில் திலகம் இட்டு அனுப்ப வேண்டும். முன்னோர்களின் பெயர்களை, குழந்தைகளுக்கு சொல்லித்தர வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.