மொட்டை அடித்தல் என்பது வைணவ வழிபாட்டில் காணக்கூடிய தனித்த சிறப்பு வாய்ந்த ஒன்றாகும். மனித உருவிற்கு அழகு தருவது கூந்தல், அதனை இறைவனுக்காக இழப்பதன் மூலம் தன்னையே இறைவனிடம் கொடுப்பதாக வைணவர்கள் நம்பினார்கள். வைகுண்ட ஏகாதசி அன்று நோன்பு நோற்றுக் கண்விழித்தால் இறைவன் இருக்கும் சொர்க்க வாசல் படியை அடையலாம் என்ற நம்பிக்கையும் வைணவர்களிடம் காணப்படுகின்றது. அதுபோல் மார்கழி மாதத்தில் கன்னிப்பெண்கள் நோன்பு நோற்றுத் திருப்பாவைப் பாடல்களைக் பாடினால் நல்ல கணவர் கிடைப்பார் என்ற நம்பிக்கையின் அடிப்படையிலும் வழிபாடு மேற்கொள்ளப்படுகிறது. கிருஷ்ண பரமாத்மா பிறந்த நாளை கிருஷ்ணர் ஜெயந்தி என்றும் கொண்டாடி மகிழ்கின்றனர். இவ்வாறு வைணவர்கள் திருமாலின்மீது மிகுந்த பக்திகொண்டு சிறப்புற தங்களது வழிபாட்டினை மேற்கொண்டு வருகின்றனர்.