Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
கிருஷ்ணவேணி புஷ்கரம் குபேரனின் பூர்வ ஜன்மம்
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
குபேர யோகம் அருளும் லக்ஷ்மி குபேர விரதம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

16 டிச
2016
05:12

வேத காலத்தில் நைமிசாரண்யத்தில் இருந்த மகரிஷிகள் பல விரதங்கள் மற்றும் பூஜைகளைப் பற்றி பேசிக்கொண்டு இருந்தார்கள். அப்போது அங்கே வந்த திரிலோக சஞ்சாரியான நாரத மகரிஷி, வரப்போகும் கலியுகத்தில் செல்வம் இருந்தால்தான் பூஜை வழிபாடுகள் சாத்தியப்படும். அந்த செல்வத்தைப் பெற உகந்த வழிபாடு லக்ஷ்மி குபேர வழிபாடுதான் என்றவர் தொடர்ந்து, கலியுகத்தில் ஏகாதசி விரதம், ரதசப்தமி விரதம், பவுர்ணமி விரதம், சிவராத்திரி விரதம், கார்த்திகை விரதம் என்று பல விரதங்கள் உலக மக்களால் அனுஷ்டிக்கப்படும். ஆனால், அந்த விரதங்களை அனுஷ்டிக்க பொருள் வசதி வேண்டும். அந்தப் பொருள் வசதி பெறுவதற்கான விரதம்தான் லக்ஷ்மி குபேர விரதம். இந்த பூஜையைச் செய்பவர்கள் பெரும் நிதியைப் பெறுவார்கள் என்றார். மகரிஷிகள், நாரதரே! நீங்கள் சொல்வது எங்களுக்கு ஆச்சர்யமாக இருக்கிறது. விரதங்களையும், பூஜைகளையும் அனுஷ்டிக்க பொருள் கட்டாயம் தேவையா? என்று கேட்டனர்.

ஆம். கலியுகத்தில் தண்ணீர்கூட காசு கொடுத்தால்தான் கிடைக்கும் என்று நிலை வரப்போகிறது. பொருள் இருந்தால்தான் அருள் தேடமுடியும். அந்தப் பொருளையும் ஒருவன் தர்மத்துக்கு மீறாத வகையில் அடையவேண்டும். அப்போதுதான் பொருளுடன் அருள் தேடி புண்ணியம் பெறவும் முடியும். தீபாவளி அன்று செய்யவேண்டிய லக்ஷ்மிகுபேர பூஜைதான் இதற்குச் சிறந்த வழி. வடக்கு திசைக்கு அதிபதியான குபேரனே அனைத்து செல்வங்களையும் அருள்புரிபவன். மகாலக்ஷ்மி தேவியை பூஜித்து சங்க நிதி, பதும நதி உள்ளிட்ட நவநிதிகளையும் வரமாகப் பெற்றவன். கலியுகத்தில் தீபாவளி நன்னாளில் லக்ஷ்மிகுபேர பூஜை செய்வதால் அனைத்து செல்வங்களையும் பெற்று வளமுடன் வாழலாம் என்றார்.

ஆம்! நாமும் தீபாவளி திருநாளில் லக்ஷ்மி குபேர பூஜை செய்து சகல செல்வ வளங்களையும் குபேர சம்பத்துகளையும் வரமாகப் பெறுவோம். முன்னதாக, குபேரனின் திருக்கதைகளையும், அவரது மகிமைகளையும், தெய்வங்களின் திருவருளால் அவருக்கு குபேர பதவி கிடைத்த அருட்கதையையும், குபேரனுக்கும் செல்வம் அருளும் அலைமகளின் மகத்துவங்கள்.

பகிர்க copied
 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »

வெள்ளி வியாபாரி அக்டோபர் 28,2026

வியாபாரி ஒருவர் பழைய பாத்திரங்களை கிலோ ரூ.50க்கு வாங்குவதாக கூவிக் கொண்டு போனார். பேராசை கொண்ட அமலா, ... மேலும்
 

பொறுப்பு அக்டோபர் 28,2026

பண்டிகை நாளில் இரவில் பார்ட்டிக்கு செல்வதே மகிழ்ச்சி என பலர் நினைக்கின்றனர்.  குடும்பச்சூழலை ... மேலும்
 

சிரித்த முகம் அக்டோபர் 28,2026

* சிரித்த முகத்துடன் இருப்பவரே தொழிலில் வெற்றி பெறுவர். * நல்ல மனைவியும், உடல்நலமும் அமைவது வரம்.  * ... மேலும்
 

நன்மை அக்டோபர் 28,2026

புதிய முயற்சியில் ஈடுபடும் போது ஆர்வமாக செயல்படுவது இயல்பு. நாளடைவில் அதுவே குறைந்து விடும். அதனால் ... மேலும்
 

பெற்றோருக்கு... அக்டோபர் 28,2026

ஒழுக்கம், பணிவு,  துணிவு இவற்றை சிறுவயதிலேயே குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுங்கள்.  ‘நல்ல குணம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar