அலங்காநல்லுார்: அலங்காநல்லுாரில் வாடிப்பட்டி சாலையில் உள்ள ஐயப்பன் கோயிலில் நவநீத கண்ணன் மாதர் பஜனை குழு மற்றும் மகளிர் அமைப்பு சார்பில் திருவிளக்கு பூஜை நடந்தது. நேற்று நவக்கிரக ஹேமம், துர்க்கா பூஜை உட்பட பல்வகை பூஜைகள், தன்வந்திரி ஹோமம் உட்பட பல்வேறு வேள்வி பூஜைகள் நடந்தன. நேற்று பூப்பல்லக்கில் சுவாமி அருள் பாலித்தார். ஆதிபராசக்தி வார வழிபாட்டு மன்ற நிர்வாகிகள் ஒத்துழைப்புடன் அன்னதானம் நடந்தது. ஏற்பாடுகளை நிர்வாகி சீனிவாசன் தலைமையில் வட்டார ஐயப்ப பக்தர்கள் சங்கத்தினர் செய்திருந்தனர்.