பதிவு செய்த நாள்
19
டிச
2016
11:12
பந்தலூர்: புதிதாக அறிமுகமாகியுள்ள, ரெடிமேடு நெய் அகல் விளக்குகள், ஐயப்ப பக்தர்கள் மத்தியில், பெரும் வரவேற்பை பெற்று விளங்குகிறது. குரு பகவானுக்கு வியாழக்கிழமைகளில், நெய் அகல் விளக்கு ஏற்றப்படுகிறது. ஏதேனும் தோஷங்கள் இருந்தால், இந்த விளக்கு வைத்து வழிபாடு செய்யப்படுகிறது. தற்போது சபரிமலை சீசன் துவங்கியுள்ள நிலையில், ஐயப்பனுக்கு நெய் விளக்கேற்றும் வழக்கம், பக்தர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. இதற்காக மண்ணால் ஆன அகல் விளக்கு, நெய், திரி போன்றவை தனித்தனியாக வாங்க வேண்டும். குறைந்தளவு அகல் விளக்கு வைக்க வேண்டுமானாலும், கூடுதல் விலை கொடுத்து, நெய் வாங்க வேண்டும். இந்த நிலையை மாற்றும் வகையில், மதுரையில் தயாரிக்கப்பட்ட, ரெடி மேடு நெய் அகல் விளக்கு, விற்பனைக்கு வந்துள்ளது. இந்த மண் அகல் விளக்கில் கெட்டியான நெய்யில், திரி இணைக்கப்பட்டுள்ளது. பெரிய விளக்கு, 10 ரூபாய்க்கும், சிறிய விளக்கு, 5 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதன் மூலம் விளக்கு, நெய் திரி போன்றவற்றை தனித்தனியாக பெற தேவையில்லை. இந்த ரெடிமேடு நெய் அகல் விளக்கு, சபரிமலை பக்தர்கள் மத்தியில் பெருத்த, வரவேற்பை பெற்றுள்ளது.