கடலுார்: கடலுாரில் மார்கழி மாத பாவை நோன்பிற்காக திருப்பாவை, திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி புத்தகங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. தமிழ்நாடு பிராமணர் சங்கத்தின் கடலுார் மஞ்சக்குப்பம் கிளை சார்பில் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. உறுப்பினர் கோதண்டராமன் முன்னிலை வகித்தார். பொதுச் செயலர் பரகால ராமானுஜம் வரவேற்றார். மாநில செயலர் திருமலை தலைமை தாங்கி, மாணவ, மாணவியருக்கு திருப்பாவை, திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி புத்தகங்களையும், இனிப்பையும் வழங்கினார். சாவடி கிளைத் தலைவர் வரதராஜன், ராமன் ஆகியோர் பாவை நோன்பு பற்றி விளக்கிக் கூறினர். உறுப்பினர் சுவாமிநாதன் நன்றி கூறினார்.