பதிவு செய்த நாள்
20
டிச
2016
01:12
ஈரோடு: மாநகரின் பிரசித்தி பெற்ற, கோவில்களில் ஒன்றான, சூரம்பட்டி சுயம்பு மகா மாரியம்மன் கோவில் பொங்கல் திருவிழா, பூச்சாட்டுதலுடன் இன்று இரவு தொடங்குகிறது. பூச்சாட்டுதலை தொடர்ந்து, 24ல் கம்பம் நடுதல், பூவோடு வைத்தல், தீர்த்தம் கொண்டு வருதல் நிகழ்ச்சி நடக்கிறது. விழாவின் முக்கிய நிகழ்வாக, ஜனவரி, 4ல் பொங்கல் வைபவம், மாவிளக்கு ஊர்வலம் நடக்கிறது. ஜன.,5ல் கம்பம் பிடுங்குதல், 7ல் மறு பூஜையுடன் விழா நிறைவு பெறுகிறது. விழாவுக்காக கோவில் சுற்றுப்பிரகார சுவர், மண்டபம், கம்பம் விடப்படவுள்ள கோவில் கிணறு சுத்தம் செய்யப்பட்டு, வண்ணம் தீட்டும் பணி தொடங்கியுள்ளது..