பதிவு செய்த நாள்
20
டிச
2016
01:12
குளித்தலை: ராமானுஜரின் ஆயிரமாவது ஆண்டு விழா, குளித்தலையில் நடந்தது. குளித்தலை நீலமேகபெருமாள் கோவிலில், நேற்று முன்தினம் இரவு, ராமானுஜரின் ஆயிரமாவது விழா முன்னிட்டு, சமூகஆர்வலர் கோபாலதேசிகன் தலைமையில், ராமானுஜர் திருஉருவ படத்துக்கு வழிபாடு நடத்தினர். இதில், திருக்கோஷ்டியூர் நம்பியிடம் ராமானுஜர் உபதேசம் பெற ஸ்ரீரங்கத்தில் இருந்து, திருக்கோஷ்டியூருக்கு, 18வது முறையாக சென்று, நாராயண மந்திரத்தை உபதேசம் பெற்றார். அந்த திருமந்திரம், விழாவில் ஓதப்பட்டது. பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர், ஆன்மீக அன்பர்கள் பங்கேற்றனர்.