Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news புயலால் ஜலசமாதி ஆன தனுஷ்கோடி: நாளை ... கிறிஸ்துமஸ் சிந்தனை- 7: உப்பு நீரில் நல்ல தண்ணீர் கிறிஸ்துமஸ் சிந்தனை- 7: உப்பு நீரில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சபரிமலையில் 26ல் மண்டலபூஜை; தங்க அங்கி நாளை புறப்பாடு
பகிர்க copied
எழுத்தின் அளவு:
சபரிமலையில் 26ல் மண்டலபூஜை; தங்க அங்கி நாளை புறப்பாடு

பதிவு செய்த நாள்

21 டிச
2016
11:12

சபரிமலை: சபரிமலையில் 26-ம் தேதி மண்டலபூஜை நடைபெறுகிறது. இதையொட்டி ஆரன்முளா பார்த்தசாரதி கோயிலில் இருந்து தங்க அங்கி பவனி நாளை புறப்படுகிறது. கார்த்திகை ஒன்றாம் தேதி முதல் தொடர்ச்சியாக 41 நாட்கள் நடைபெறும் பூஜைகளின் நிறைவு பூஜைதான் மண்டலபூஜை. இந்த ஆண்டு 26-ம் தேதி நடைபெறுகிறது. இந்நாளில் ஐயப்பனின் விக்ரகத்தில் அணிவிக்க திருவிதாங்கூர் மன்னர் சித்திரை திருநாள் மகாராஜா1973-ல் தங்க அங்கியை காணிக்கையாக வழங்கினார். இது மண்டலபூஜைக்கு முந்தைய நாளிலும், மண்டலபூஜை நாளிலும் ஐயப்பன் விக்ரகத்தில் அணிவிக்கப்பட்டிருக்கும். பத்தணந்திட்டை மாவட்டம் ஆரன்முளா பார்த்தசாரதி கோயிலில் வைக்கப்பட்டுள்ள இந்த அங்கி ஒவ்வொரு ஆண்டும் மண்டலபூஜைக்கு நான்கு நாட்கள் முன்னதாக பவனியாக எடுத்து வரப்படுகிறது.

சபரிமலை மாதிரியில் வடிவமைக்கப்பட்ட ரதத்தில் அங்கி வைக்கப்பட்டு வழிநெடுகிலும் பக்தர்களின் வரவேற்பை பெற்று வருகிறது. நாளை காலை ஆறு மணிக்கு ஆரன்முளா பார்த்தசாரதி கோயிலிலிருந்து இந்த பவனி பலத்த பாதுகாப்புடன் புறப்படுகிறது. நாளை ஓமல்லுார் பகவதி கோயிலிலும், 23-ம் தேதி கோந்நி முருங்கமங்கலம் கோயிலிலும், 24-ம் தேதி பெருநாடு சாஸ்தா கோயிலிலும் தங்கும் இந்த பவனி 25-ம் தேதி மதியம் பம்பை வந்தடையும். பம்பை கணபதி கோயில் அருகில் பக்தர்கள் தரிசனத்துக்காக வைக்கப்படும் இந்த அங்கி மாலை மூன்று மணிக்கு தலைச்சுமடாக சன்னிதானத்துக்கு கொண்டுவரப்படும்.25 மாலை 6:30 மணிக்கு தங்கஅங்கி சார்த்தி தீபாராதனை நடைபெறும். 26-ம் தேதி மண்டலபூஜை நேரத்திலும் ஐயப்பனுக்கு இந்த அங்கி அணிவிக்கப்பட்டிருக்கும். தங்கஅங்கி பவனிக்காக பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.26 இரவு 10:௦௦ மணிக்கு நடை அடைக்கப்பட்ட பின்னர் மகரவிளக்கு கால பூஜைக்காக 30-ம் தேதி மாலை 5:௦௦ மணிக்கு நடை திறக்கும். அன்று வேறு எந்த பூஜைகளும் நடைபெறாது. 31 அதிகாலை மூன்று மணிக்கு நடை திறந்து நெய்யபிஷேகம் நடைபெறும்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தீபாவளிக்கு முந்தைய நாள் எம தீபம் ஏற்றுவது நம் மரபு. எம தீபம் ஏற்றினால் குடும்பம் விருத்தியாகும். ... மேலும்
 
temple news
இரண்டு பேருக்கு இடையில் மத்தியஸ்தம் செய்பவர் (பிரச்னைக்கு தீர்வு சொல்பவர்) தராசு போல நடுநிலையாளராக ... மேலும்
 
temple news
தீபாவளி நன்னாளில் எண்ணெய் தேய்த்துக் கொள்வதும், நல்ல நீரில் குளிப்பதும் அவசியம். குளிக்கும் நீர் ... மேலும்
 
temple news
நம் மனதில் இருக்கும் பேராசை, பொறாமை, கோபம் போன்ற அழுக்குகளைக் களைந்து, இந்த நாள் முதல் மனிதனாக, புதிய ... மேலும்
 
temple news
கல்விக்கு சரஸ்வதி பூஜை என்றால், செல்வத்திற்கு தீபாவளி எனும் லட்சுமி பூஜை. சரஸ்வதி பூஜை முடிந்து 20 வது ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar