Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news விவேகானந்த சேவாலயத்தில் சாரதா தேவி ... சபரிமலையில் 26ல் மண்டலபூஜை; தங்க அங்கி நாளை புறப்பாடு சபரிமலையில் 26ல் மண்டலபூஜை; தங்க ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
புயலால் ஜலசமாதி ஆன தனுஷ்கோடி: நாளை 52வது ஆண்டு நினைவு தினம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 டிச
2016
11:12

ராமேஸ்வரம்: வங்ககடலில் உருவான புயல் தாக்கியதால் 1964 டிச.,22ம் தேதி நள்ளிரவு ஜலசமாதி ஆன தனுஷ்கோடி வணிக நகரின் 52வது ஆண்டு நினைவு தினம் நாளை அனுஷ்டிக்கப்படுகிறது.

Default Image
Next News

இலங்கை மன்னர் ராவணனிடம் இருந்து சீதையை மீட்டு  ராமர் திரும்பியபோது, அவர்மீது எய்த அம்பு விழுந்த இடம் தனுஷ்கோடி, என ராமாயணத்தில் கூறப்பட்டுள்ளது. தனுஷ்கோடி கடலில் நீராடினால் பாவங்கள் விலகி புண்ணியம் சேரும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. இத்தகைய வரலாற்று சிறப்புமிக்க தனுஷ்கோடி ராமேஸ்வரத்தில் இருந்து 18 கி.மீ., துாரத்தில் உள்ளது.

வணிக நகரம்: ஆங்கிலேயர் ஆட்சியின்போது 1914ல் தனுஷ்கோடி - இலங்கை தலைமன்னார் இடையே ‘இர்வின்’, ‘கோஷன்’ என இரு பயணிகள் கப்பல் இயக்கப்பட்டது. தனுஷ்கோடியிலிருந்து சென்னைக்கு ‘போர்ட் மெயில்’ என்ற ரயில் போக்குவரத்தும் நடந்தது. இதன்மூலம் 50 ஆண்டுகள் வரை முக்கிய வணிக நகரங்களில் ஒன்றாக தனுஷ்கோடி திகழ்ந்தது.

உருக்குலைந்தது: இந்நிலையில் 1964 டிச.,22ம் தேதி நள்ளிரவு 12:30 மணிக்கு வங்க கடலில் உருவான புயலின் கோரதாண்டவத்தால் தனுஷ்கோடி கடலுக்குள் மூழ்கி ஜலசமாதி ஆனது. இதில்  மீனவர்கள் உள்பட ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர். அங்கிருந்த ரயில்வே ஸ்டேஷன், தங்கும் விடுதி, தபால் அலுவலகம், சர்ச், ராமர், விநாயகர் கோயில்கள் சின்னாபின்னமானது. இவை புயலின் எச்சங்களாக இன்றளவும் காட்சியளிக்கிறது.

துண்டிப்பு: புயலால் தனுஷ்கோடி நிர்முலமான சம்பவத்தை தேசிய பேரிழப்பாக மத்திய அரசு அறிவித்தது. மேலும் மனிதர்கள் வாழ தகுதியற்ற இடமாகவும் அறிவிக்கப்பட்டது. அன்று முதல் சாலை, மின்சாரம், குடிநீர் உள்ளிட்ட எந்த வசதி வாய்ப்புகளும் இன்றி தனுஷ்கோடி தமிழகத்துடன் இருந்து தனியாக துண்டிக்கப்பட்டது. இருந்தும் ராமேஸ்வரம் வரும் சுற்றுலா பயணிகள், பக்தர்கள்  இன்றளவும் தனுஷ்கோடிக்கு ஆபத்து பயணம் மேற்கொள்வதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

சாலை அமைப்பு: இதை தவிர்க்க 52 ஆண்டுகளுக்கு பின் 57 கோடி ரூபாய் செலவில் தனுஷ்கோடிக்கு தேசிய நெடுஞ்சாலை அமைக்கப்பட்டுள்ளது.  இந்த சாலை பிப்.,ல் திறக்கப்பட உள்ளது. மேலும் சிதிலமடைந்த சர்ச், விநாயகர் கோயில் கட்டடங்களை பழமை மாறாமல் புதுப்பிக்கவும், சுற்றுலா பயணிகள் பொழுதுபோக்க வசதியாக ஒலி, ஒளி காட்சியகம் அமைக்கவும் மாநில அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான சர்வே பணிகள் துவங்கியுள்ளது.

நீங்கா நினைவுகள்: புயல் தாக்குதலில் இருந்து தப்பிய தனுஷ்கோடி மூதாட்டி ரத்தினம்,72, கூறியதாவது: 52 ஆண்டுகளுக்கு முன்பு நள்ளிரவு குடும்பத்தினருடன் குடிசைக்குள் துாங்கி கொண்டிருந்த போது சூறாவளி காற்றுடன் பலத்தமழை பெய்தது.  திடீரென்று குடிசை வீடுகள், ரயில்வே ஸ்டேஷன், சர்ச், கோயில் என அனைத்தும் கடலுக்குள் மூழ்கியது. ரயிலில் இருந்த பயணிகள், மாணவர்கள் பலர் உயிரிழந்தனர்.  நானும், 2 வயது மகன், கணவர், உறவினருடன் மணல் மேட்டில் ஏறி உயிர் பிழைத்தோம். மறுநாள் ஹெலிகாப்டரில் உணவு, குடிநீர் கொடுத்தனர். எங்கு பார்த்தாலும் பிணங்கள் மிதந்தது. அந்த சம்பவம்
இன்று வரை எனது மனதில் இருந்து நீங்கவில்லை, என்றார்.

விரைவில் பணிகள்: சுற்றுலா ஆர்வலர் ஆசிரியர் என்.ஜெயகாந்தன் கூறுகையில், “52 ஆண்டுகளுக்கு பிறகு பலகோடி ரூபாய் செலவில் தேசிய தரத்துடன் சாலை அமைக்கப்பட்டுள்ளது. இதை பயணிகள் பயன்பாட்டுக்கு கொண்டுவரவும், இடிந்த கட்டடங்களை புதுப்பிக்கும் பணியை விரைவில் துவக்கவும், மின்சாரம், குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏற்படுத்தவும் மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்,” என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பதி; திருமலை திருப்பதி கோவிலில் வைகுண்ட ஏகாதேசி திருவிழா டிசம்பர் 30 முதல் ஜனவரி 8 வரை 10 நாட்கள் ... மேலும்
 
temple news
காரைக்குடி; காரைக்குடி மீனாட்சிபுரம் முத்துமாரியம்மன் அவதரித்த தினமான இன்று 1008 பால்குடம் எடுத்து ... மேலும்
 
temple news
திருக்கோவிலூர்; திருக்கோவிலூர் அடுத்த முடியனுர் கிராமத்தில் பாழடைந்த அருணாச்சலேஸ்வரர் கோவில் ... மேலும்
 
temple news
சென்னை: ஆந்திர மாநிலம், கடப்பா மாவட்டத்தில் உள்ள நாத நாகேஸ்வரர் கோவிலில், பொத்தப்பி சோழர்களின் ... மேலும்
 
temple news
‘‘பாரத பூமி ஒரு கர்ம பூமி; அளவற்ற ஆன்மிக சக்தியும், செல்வமும் சுரக்கும் தேசம். பொருளாதார ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar